வேலூர் கோட்டையில் கட்டிடங்களை பழமை மாறாமல் புனரமைக்க உத்தரவு

117 0

வேலூர் கோட்டையில் கட்டிடங்களை பழமை மாறாமல் புனரமைக்க கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வேலூர் கோட்டையில் புகழ்மிக்க ஜலகண்டேஸ்வரர் கோவில் அருங்காட்சியகம் போன்றவை அமைந் துள்ளது. மேலும் கோட்டையினுள் கண்டி மகால், கிளை சிறை மற்றும் பழமையான கட்டிடங்கள் ஏராளமாக அமைந்துள்ளன.
இந்த நிலையில் கலெக்டர் குமரவேல் பாண்டியன் இன்று காலை கோட்டையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருவள்ளுவர் பல்கலைக் கழக கட்டிடம், தாலுகா அலுவலக கட்டிடம், கிளைச் சிறை உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
அந்த பகுதிகளை சுத்தமாக வைத்திருக்கவும், கட்டிடங்களில் வளர்ந்துள்ள செடி, கொடி, மரங்களை வெட்டவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
கோட்டையில் உள்ள அனைத்து பழமையான கட்டிடங்கள் புனரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என அவர் தெரிவித்தார்.
ஆய்வின் போது மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கோட்டை கண் காணிப்பாளர் ராமாராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து அதிகாரிகள் குழுவினர் கோட்டையில் உள்ள பழமையான கட்டிடங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், வேலூர் கோட்டையில் ஏராளமான பழமையான கட்டிடங்கள் அமைந்துள்ளன. இந்த கட்டிடங்கள் நாளடைவில் சிதிலமடைந்து வருகிறது.
இதை தடுக்க அனைத்துக் கட்டிடங்களையும் கணக்கெடுத்து புணரமைக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக எந்தெந்த கட்டிடங்கள் புனரமைக்கப் படவேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளன. பல கட்டிடங்கள் பழமையை பறைசாற்றும் வகையில் தற்போதும் அமைந்துள்ளது. அந்தக் கட்டிடங்களை பழமை மாறாமல் புனரமைத்து மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு விட வழிவகை செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.