காலிமுகத்திடல் போராட்டம் : பொலிஸாரால் அகற்றப்பட்ட படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் பதாதைகள்

258 0

ஜனாதிபதி செயலகத்தின் கம்பி வேலியில் கட்டப்பட்டிருந்த படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் பதாதைகளை பொலிஸார் அகற்றியுள்ளனர்.

கொழும்பு, காலிமுகத்திடல் பகுதியில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்று வரும் ” கோட்டா கோ கம” எனும் அரசுக்கு எதிரான போராட்டத்தில், கடந்த காலத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரியே குறித்த ஊடகவியலாளர்களின் பதாதைகள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உள்ள கம்பி வேலிகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன .

இந்நிலையிலேயே குறித்த ஊடகவியலாளர்களின் பதாதைகள் தற்போது பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.