வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை, ருஹுணுகம பிரதேசத்தில் குறித்தநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ருஹுணுகம – தடயந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதான இளைஞரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை மத்திய முகாம் பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

