மட்டக்களப்பு, ;திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சாகாமம் குளத்தில் அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (26) பகல் மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் வேளாண்மை பயிர் செய்கைக்கு சென்ற விவசாயிகள் குளத்தில் சடலம் ஒன்று மிதப்பதை சம்பவதினமான இன்று பகல் கண்டுள்ளதையடுத்து பொலிசாருக்கு அறிவித்தனர்.
இதனை தொடர்ந்து குறித்த குளத்தில் நீரில் மிதந்து கொண்டிருந்த ஆண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்காக நீதிமன்ற உத்தரவை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர் 

