5 நாட்களில் கொழும்பிற்குள் நுழையவுள்ள மிகப்பெரிய குழு

329 0

பெருந்திரளான மக்களின் பங்குபற்றுதலுடன் கண்டியில் ஆரம்பமாகியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்க எதிர்ப்பு பாதயாத்திரை கடுகன்னாவ நகரை வந்தடைந்துள்ளதாக தெரியவருகிறது.

எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள் தலதாமாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த குழுவினர் 5 நாட்களில் கொழும்பை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.