மிருககாட்சி சாலையில் புலி தாக்கி ஒருவர் பலி – (காணொளி இணைப்பு)

378 0

கிழக்கு சீனாவில் நன்போ நகரில் அமைந்துள்ள மிருககாட்சி சாலைக்கு அனுமதி சீட்டு இன்றி பாதுகாப்பு சுவர் வழியாக நுழை முற்பட்ட நபரொருவர் புலியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபரின் மனைவியும், குழந்தையும் அனுமதி சீட்டுக்களை பெற்று மிருககாட்சி சாலைக்கு சென்றுள்ளனர்.

எனினும் இவர் அனுமதி சீட்டு இன்றி உள்நுழைய முற்பட்டுள்ளார்.

இதன்போது புலியின் தாக்குதலுக்கு உள்ளான குறித்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பின்னர் அந்த நபரை தாக்கி புலியை மிருககாட்சி சாலை பாதுகாவலர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை பலரின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

The URL of the Video-https://youtu.be/uW7iaGQPQwA