கொழுத்தும் வெயிலிலும் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்

216 0

பருத்தித்துறையில் உள்ள சதொசவில் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு கொழுத்தும் வெயிலிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பொருட்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.

அண்மைய நாட்களாக பொருட்களின் விலை நாளாந்தம் அதிகரிக்கும் நிலையில் மக்கள் சதொசவில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.

தற்போது இலங்கையில் நாட்டரிசி ஒரு கிலோகிராம் 240 ரூபாவிற்கும், கோதுமை மா ஒரு கிலோகிராம் 230 ரூபாவிற்கும்,  செத்தல் மிளகாய் ஒரு கிலோகிராம் 2000 ரூபாவிற்கும், சீனி  ஒரு கிலோகிராம் 240 ரூபாவிற்கும், விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்கது.