யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங். யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டீன் பெர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
காலை 8.30 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ள நிலையில் இதன்போது யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் சமகாலப் போக்குகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

