உலக ஊடகவியலாளர்கள் மாநாடு தென் கொரியா சியோல் நகரில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியது.
;இம்முறையும் மெய் நிகர் ஊடான மாநாடாகவே இடம்பெறுகின்றது.
தென் கொரிய ஊடகவியலாளர் அமைப்பு ஏற்பாடு செய்யும் இந்த மாநாட்டில் இலங்கை உட்பட 25 நாடுகளை சேர்ந்த 30 பேச்சாளர்களுக்கு கொரிய பிரதமர் கிம் பூ-கியூம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஆனைத்துலக ஊடகவியலில் போலி செய்திகளின் தாக்ககம் மற்றும் அவற்றை எதிர்த்துப் போராடுவதன் முக்கியத்துவம் போன்ற விடயங்களில் அனுபவ பகிர்வு மற்றும் உலக அமைதியில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு போன்ற விடயங்களை வலியுறுத்தியதாகவே இம்முறை மாநாடு அமைந்துள்ளது.
தொடக்க விழாவில் கொரியாவின் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர் கிம் டோங் ஹூனின் கருத்துகளும், சியோல் சுற்றுலா அமைப்பின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கி யோன் கிலின் வாழ்த்துரையும் இடம்பெற்றதுடன் முதல் நாள் பேச்சாளர்களின் உரைகளும் இடம்பெற்றன.
ஆசியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பரந்த ஊடகவியலாளர்களின் வலையமைப்பைக் கொண்ட ஊடகவியலாளர்கள் உலக அமைதியில் உள்ள பங்களிப்பு குறித்து ஆசிய பத்திரிகையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரான சாங்-கி லீ இதன் போது தெளிவுப்படுத்தினார்.
2013 இல் தொடங்கப்பட்டதில் இருந்து, உலக பத்திரிகையாளர்கள் மாநாடு பல்வேறு பின்னணியில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு ஒரு சிறந்த தளமாக உள்ளது.
1964 இல் நிறுவப்பட்ட கொரியாவின் ஊடகவியலாளர் சங்கம் நூற்றுக்கணக்கான ஊடக நிறுவனங்களில் இருந்து 10,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளமை குறிப்பித்தக்கது.

