ஜனாதிபதி செயலகத்தின் விஷேட அறிவிப்பு

227 0

அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான குழுவின் அறிக்கை ஜனாதிபதி செயலகத்திற்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஜனாதிபதி பாராட்டினார்.

எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையை தீர்மானிக்கும் நோக்கில் அரசாங்கம் அறிக்கையின் உள்ளடக்கங்களை ஆழமாக பரிசீலிக்கும் என ஜனாதிபதியின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.