பாரவூர்தி மோதியதில் பழைமையான மரம் முறிந்தது

340 0
பழமைவாய்ந்த மரம் மீது பாரவூர்தி மோதியதில் அந்த மரம் முறிந்து நடுவீதியிலேயே விழுந்தமையால், அந்த வீதியின் ஊடான போக்குவரத்து இரு மணிநேரம் பாதிக்கப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் தாளங்குடா சந்தியில் இன்று (25) காலை, இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

காத்தான்குடி போக்குவரத்து பொலிசார் ஸ்தலத்திற்கு விரைந்து மரத்தை அறுத்து வீதிப்போக்குவரத்தை சீர் செய்தனர்.

குறித்த பிரதேசத்தில் மரம் விழுந்து மின்கம்பங்கள் அறுந்து விழுந்தமையால் மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

சுமார் 30 வருடங்கள் பழைமை வாய்ந்த இம்மரம் பிரதேசத்தின் அடையாளமாகக் காணப்பட்டதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.