லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் – அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் இன்று கீவ் வருகை

246 0

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 2 மாதமாகிறது. உக்ரைனுக்கு எதிரான போரில் கடந்த 24 மணி நேரத்தில் ரஷியாவிற்கு எந்த முன்னேற்றமும் இல்லை என பிரிட்டன் ராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது.

24.4.22
03.15: ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் 26-ம் தேதி மாஸ்கோ செல்கிறார். அங்கு அதிபர் புதினுடனும், வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவுடனும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அதைத்தொடர்ந்து அவர் உக்ரைன் சென்று அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியையும் சந்திக்கிறார். இந்த சந்திப்புகளின்போது போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்துகிறார்.00.30: அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் இன்று உக்ரைன் தலைநகர் கீவுக்கு வருகை தருகின்றனர் என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.