தனது பாதுகாப்பிற்காக இராணுவத்தை கைவிட முடியாத நிலையில்,படைத்தரப்பினரை நம்பி வாழும் ஒரு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச என இலங்கையிலுள்ள மூத்த அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
ஊடக நிகழ்ச்சியில் தனது கருத்தை வெளிப்படுத்தும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும்
தேர்தலின் மூலம் இலங்கையில் அரைவாசி இராணுவ ஆட்சியினை ஜனாதிபதி கொண்டு வந்துவிட்டார் என்பதே உண்மை.
போர்க்குற்றச்சாட்டினை பொருத்தவரையில் படைகளை ஜனாதிபதி காப்பாற்ற வேண்டும்.படைகள் ஜனாதிபதியை காப்பாற்ற வேண்டும்.காரணம் இருவரின் மீதும் ஒரே மாதிரியான போர்க்குற்றங்கள் காணப்படுகின்றது.
இலங்கைத்தீவில் இராணுவ ஆட்சியை உருவாக்கக்கூடிய கட்டமைப்பு மிகவும் பலவீனமாகவுள்ளது.இந்த பின்னணியில் தற்போதைய போராட்டங்களை இந்த அரசாங்கம் எவ்வாறு அணுகும் என்பதினை தற்போது கூற முடியாது.
போராட்டக்காரர்கள் மூர்க்கத்தனமா போராடி அரசாங்கத்தினை வெறுப்பேற்றுவார்களாயின் அரசாங்கம் அதனை எவ்வாறு கையாளும் என்பதினை கூறமுடியாது. இருப்பினும் அரசாங்கம் வன்முறையை கொண்டு போராட்டத்தினை அடக்கும் முயற்சியை மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

