ரம்புக்கனை சம்பவம் ; விசாரணைகளை முன்னெடுக்க விசேட குழுவை நியமித்தது மனித உரிமைகள் ஆணைக்குழு

275 0

கேகாலை – ரம்புக்கனை பிரதேசத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் இதன் போது ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மூவரடங்கிய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை முன்னெடுத்து உடனடியாக அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் ரோஹிணி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று புதன்கிழமை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இப்பகுதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதன் போது கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.