2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு அப்போதைய புலனாய்வு பிரிவின் பிரதானியும் தற்போதைய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான நிலந்த ஜயவர்தனவே பொறுப்புக் கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஜனாதிபதி ஊடக மய்யத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் வீரகோன் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த தாக்குதல் நடைபெற போவதாக முன்கூட்டியே தகவல்கள் கிடைத்திருந்தாலும் அது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்க தவறியமை தொடர்பில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனவே பொறுப்பு கூற வேண்டியவர் என தெரிவித்துள்ளார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி சில்வாவும் கலந்துகொண்டிருந்ததுடன், இதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் குறித்தும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

