ஊசி வடிவ சாக்லேட்டுகளால் குழந்தைகள் பாதிக்கும் அபாயம்

175 0

ஊசியுடன் பயன்படுத்தும் ‘சிரிஞ்சு’க்குள் சாக்லேட் அடைக்கப்பட்டுள்ளது. அதை ஊசி போடுவது போன்று அழுத்தியதும் சாக்லேட் வெளியே வரும்.

பள்ளி மாணவர்களை கவரும் வகையில் விதவிதமான தின்பண்டங்கள், சாக்லேட்கள் மார்க்கெட்டில் விற்பனைக்கு வருகின்றன.
பெரும்பாலான தின்பண்டங்களில் தயாரிப்பு, காலாவதி தேதி உள்ளிட்ட எதுவும் குறிப்பிடப்படுவதில்லை. சமீப நாட்களாக பள்ளி மாணவர்களை கவரும் வகையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் ஊசி வடிவிலான சாக்லேட்கள் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ஊசியுடன் பயன்படுத்தும் ‘சிரிஞ்சு’க்குள் சாக்லேட் அடைக்கப்பட்டுள்ளது.
அதை ஊசி போடுவது போன்று அழுத்தியதும் சாக்லேட் வெளியே வரும்.
கவர்ச்சிகரமாக இருப்பதால் மாணவர்களும் அவற்றை வாங்கி உண்கின்றனர். இவற்றில் தயாரிப்பு, காலாவதி தேதி, முகவரி உள்ளிட்ட எதுவும் கிடையாது. இதுபோன்ற சாக்லேட்டுகளை லாபம் கருதி வியாபாரிகளும் விற்கின்றனர்.
இதனால், மாணவர்களுக்கு பல்வேறு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு இதுபோன்ற தின்பண்டங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.