மேலும் மூன்று புதிய இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்

302 0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மேலும் மூன்று புதிய இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மூன்று இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நியமிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில்,

சீதா அரம்பேபொல – கல்வி மற்றும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர்

டயானா கமகே – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்

விஜித பேருகொட – துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.