நயினாதீவில் புதிதாக புத்தர்சிலையொன்றை பாதுகாப்பு அமைச்சர் திறந்துவைத்தார்!

235 0

நயினாதீவில் மீண்டும் பௌத்த சின்னங்களை அதிகரித்து, அதனைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் சிறீலங்கா இராணுவத்தினர் செயற்பட்டு வருகின்றனர்.

இதன் ஒரு கட்டமாக நயினாதீவு நாகதீப புரான விகாரையில் புதிதாக புத்தர் சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கருங்கல்லில் செதுக்கப்பட்ட குறித்த புத்தர் சிலையை கடந்த 26ஆம் நாள் சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி திறந்துவைத்துள்ளார்.

குறித்த புத்தர் சமாதி நிலையில் நாகபாம்பில் அமர்ந்திருப்பதுபோல் செதுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கடற்படைத் தளபத்தி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் தயா சந்தகிரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நயினாதீவில் ஏற்கனவே 120மில்லியன் ரூபா செலவில் 75அடி புத்தர் சிலையொன்றை அமைக்கும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ள நிலையில், அதற்கு உரிய முறையில் அனுமதி பெறப்படாததால் அந்தப் பணி இடைநிறுத்திவைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.