சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு

156 0

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த வீடுகளில் உள்ள மக்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சீனாவில் கொரோனா பரவல் உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, சீனாவின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்கு வகிக்கும் ஷாங்காய் நகரில் இதுவரை கண்டிராத பரவல் ஏற்பட்டுள்ளது.
தினமும் 20,000 தொற்று பதிவாகி வரும் நிலையில், பரவலைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உணவு பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

ஷாங்காய் நகரில் தொற்றை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வரும் நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்கு இடங்களை ஏற்பாடு செய்வதற்கு வீடுகளில் உள்ள மக்களை வெளியேற்றும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஷாங்கார் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் 2417 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நகரின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கை அமல்படுத்தியுள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.