உலக பாரம்பரிய தினம்: மாமல்லபுரத்தில் இன்று பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்

198 0

மாமல்லபுரம் கடற்கரை கோவில் பகுதியில், காலை 9:30 மணிக்கு, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், புகைப்பட கண்காட்சியை துவக்கி, மாமல்லபுரம் சிற்பங்கள் குறித்து நுாலை வெளியிடுகிறார்.

உலகில் உள்ள பண்டைய காலத்து பாரம்பரிய, கலாச்சார நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 ஆம் தேதி உலக பாரம்பரிய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.அந்த வகையில், இன்று உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்களை இன்று மாலை 6 மணி வரை இலவசமாக கண்டு களிக்கலாம் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

மாமல்லபுரம் கடற்கரை கோவில் பகுதியில், காலை 9:30 மணிக்கு, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், புகைப்பட கண்காட்சியை துவக்கி, மாமல்லபுரம் சிற்பங்கள் குறித்து நுாலை வெளியிடுகிறார்.