திங்கட்கிழமைக்குள் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பும்!

120 0

திங்கட்கிழமைக்குள் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

37,500 மெட்ரிக் தொன் பெற்றோலை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்ததுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 41,000 மெட்ரிக் டன் டீசல் ஏற்றிச் செல்லும் கப்பல் வந்துள்ள நிலையில் எரிபொருளை இறக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.