போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர் கைது ; மினுவாங்கொடையில் சம்பவம்

368 0

மினுவாங்கொடை வாரச் சந்தையில் வர்த்தகர் ஒருவரிடம் போலி 1000 ரூபா நாணயத்தாளை பரிமாற்றம் செய்த நிலையில், சந்தேக நபர் ஒருவரை மினுவாங்கொடை பொலிஸார் நேற்று ( 13) கைது செய்துள்ளனர்.

கம்பஹா ; தாரலுவ பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையே பொலிஸார் கைது செய்துள்ள நிலையில், சந்தேக நபர் தொடர்பிலான மேலதிக விசாரணைகள்  சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார்.

நேற்று இடம்பெற்ற மினுவங்கொடை வாரச் சந்தையில், நபர் ஒருவர் வர்த்தகர் ஒருவருக்கு 1000 ரூபா  நாணயத் தாள் ஒன்றினை கொடுத்து பொருள் கொள்வனவு செய்துள்ளார்

அந்த நாணயத்தாள் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தில் இது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளனர்.

பொலிஸார் சந்தேக நபரை சோதனை செய்த போது அவரிடமிருந்து  1000 ரூபா போலி நாணயத் தாள்கள் 34 இனைக் கைப்பற்றியுள்ளனர்

அதன் பின்னர் சந்தேக நபரின் வீட்டை சோதனை செய்த பொலிஸார் பின்னர், ; கம்பஹா – பண்டாரவத்த பகுதியில் சந்தேக நபர் நடாத்திச் சென்ற  புகைப்படங்கள் சார் வர்த்தக நிலையத்தையும் பொலிஸார் சோதனை செய்துள்ளனர்.

இதன்போது அந்த வர்த்தக நிலையத்திலிருந்து 5 ஆயிரம் ரூபா போலி நாணயத் தாள்கள் 8 இனையும் ; 1000 ரூபா போலி நாணயத் தாள் 4 இனையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

அந்த வர்த்தக நிலையத்திலேயே போலி நாணயத் தாளகள் அச்சிடப்பட்டுள்ளதாக சந்தேகிகப்படுகிறது. ;
அதனால் அதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கணினி ஒன்று அச்சு இயந்திரம் ஒன்று, ; 4 கையடக்கத் தொலைபேசிகள், 2 தகவல் சேமிப்பு பெட்டகங்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

;இந் நிலையிலேயே இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் சி.ஐ.டி.யினரிடம் ; கையளிக்கப்பட்டுள்ளன.