கடன் விவகாரம்; ஐ.தே.க வருத்தம்

373 0

அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் திருப்பிச் செலுத்துவதை இடைநிறுத்தப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளமை குறித்து ஐக்கிய தேசியக் கட்சி வருத்தம் தெரிவித்துள்ளது.

எமது கடனை திருப்பிச் செலுத்துவதில் இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து கறைபடாத சாதனையைப் பெற்றுள்ளது என்று கட்சியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கட்டான சமயங்களில் கூட ஒரு தேசமாக நாங்கள் எங்கள் இடுப்பு பட்டியைஇறுக்கிக் கொண்டு பணம் செலுத்தியுள்ளோம். ஆனால், அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்தால் தற்போதைய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அனைத்து வெளி சேவைகளையும் இடைநிறுத்துவது, கடன் கடிதங்களை எளிதாக்குவதற்கு வெளிநாட்டுக் கடன்களைப் பெற்ற வங்கிகள் மற்றும் சர்வதேச இறையாண்மைப் பத்திரங்களை  வைத்திருப்பவர்களுக்கும் தேவையற்ற அழுத்தத்தைக் கொண்டுவரும் என்றும் ஐ.தே.க சுட்டிக்காட்டியுள்ளது.

2020 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எமது நிதிக் கடமைகளை மறுசீரமைக்க சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுமாறு பரிந்துரைக்கப்பட்டது.

இந்த அறிவுரையை நிறைவேற்ற அதிகாரிகள் காலதாமதம் செய்வதால், நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஏனையவர்கள் விடுத்த அழைப்புகளுக்கு செவிசாய்த்திருந்தால் இந்த நிலையைத் தவிர்த்திருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதிய நிதியைப் பெறுவதற்கு முன்னர் நாணய மதிப்பைக் குறைக்கும் தீர்மானத்தையம், இந்த நிலைக்கு வழிவகுத்த நாட்டின் கடனை மறுசீரமைப்பதைத் தாமதப்படுத்தும் அரசாங்கத்தின் தீர்மானத்தையும் விசாரிப்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவை ஸ்தாபிக்குமாறு ஐ.தே.க கோரியுள்ளது.