ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் பாப்பரசரை சந்திக்க வாய்ப்பு

232 0

ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் இலங்கையை சேர்ந்த 35 குடும்பங்களின் உறவினர்கள் புனித பாப்பரசர் பிரான்ஸிசை சந்திக்க வத்திகான் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரும் மே மாதம் முதல் வாரம் இந்த குடும்பங்களின் உறவினர்கள் பாப்பரசரை சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் அனைத்து குடும்பங்களும் அழைக்கப்பட்டு குலுக்கல் முறையில் அந்த குடும்பங்களை சேர்ந்த 35 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பாப்பரசரை சந்தித்த பின்னர் இத்தாலியின் பாதுவா நகரில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த இத்தாலியில் வாழும் இலங்கையர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.