தமிழக முதல்வரின் உதவிக் கரங்கள் இன வரம்பில்லாமல் நீள வேண்டும் – மனோ

292 0

தமிழக முதல்வரின் உதவிக் கரங்கள் இன வரம்பில்லாமல் எல்லா இலங்கையருக்காகவும் நீள வேண்டுமென கோருகிறோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வரின் உதவி கரங்கள், எல்லா தமிழருக்காகவும் நீள்வதை நன்றியுடன் வரவேற்கும், அதேவேளை, இன்று இலங்கையில் நிகழும் ஏகோபித்த போராட்டங்களை அனுசரிக்கும் விதமாக முதல்வரின் சமூகநீதி கரங்கள் இன வரம்பில்லாமல் எல்லா இலங்கையருக்காகவும் நீள வேண்டுமென கோருகிறோம் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.