பொதுமக்களால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்கள் நேரடியாக அரசாங்கத்திற்கோ, தனியொரு அரசியல் கட்சிக்கோ, ஆளுங்கட்சிக்கோ எதிரானது அல்ல. நாட்டில் நடைமுறையிலுள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்டமைப்பிற்கும் எதிராகவே அவர்கள் போராடுகின்றார்கள் என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இலங்கையிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் தெரிவித்துள்ளார்.
தற்போது நாடு பொருளாதார நெருக்கடிக்கு மாத்திரமன்றி, அரசியல் நெருக்கடிக்கும் முகங்கொடுத்திருக்கின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த வாரம் இலங்கையிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், நாட்டின் நிலைவரம் குறித்து அவர்களிடம் விளக்கினார்.
தற்போது நாட்டுமக்கள் முகங்கொடுத்திருக்கும் மிகமோசமான நெருக்கடிகள் மற்றும் மின்விநியோகத்தடை, சமையல் எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்கான பற்றாக்குறை ஆகியவற்றின் காரணமாக அந்நெருக்கடிகள் மேலும் தீவிரமடைந்துள்ளமை குறித்து அரசாங்கம் அறிந்திருப்பதாக வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் எடுத்துரைத்த அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், மின்விநியோகம் துண்டிக்கப்படுவதன் காரணமாக பல்வேறு துறைகளிலும் ஏற்பட்டிருக்கும் எதிர்மறையான விளைவுகள் மக்களின் துன்பத்தை மேலும் அதிகப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.
அத்தோடு மக்களால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் எதிர்ப்புப்போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் அந்த ஆற்றமையின் விளைவு என்றும், தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையினால் அவர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இராஜதந்திரிகளிடம் சுட்டிக்காட்டிய அமைச்சர் பீரிஸ், ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்வோரில் 80 – 85 சதவீதமானோர் அடிப்படைவாதிகளோ அல்லது அரசியல் ரீதியில் வலுவூட்டப்பட்டவர்களோ இல்லை என்றும் குறிப்பிட்டார்.
அதுமாத்திரமன்றி இலங்கை அரசியலமைப்பின் 14 ஆவது சரத்தின் பிரகாரம் ஒன்றுகூடுதல் மற்றும் கருத்துவெளிப்பாட்டுச்சுதந்திரம் ஆகிய உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான பொதுமக்களின் உரிமை என்பது இலங்கையில் இயங்குநிலையில் ஜனநாயகம் உள்ளது என்பதற்கான ஓர் குறிகாட்டியாகும் என்றும் தெரிவித்தார்.