நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு மேலதிகமாக ஜனாதிபதிக்கு எதிராக அரசியல் குற்றச்சாட்டு பிரேரணை தொடர்பான யோசனையிலும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் கையெழுத்துக்களை பெற்று வருவதாக தெரியவருகிறது.
நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான யோசனையில் எதிர்க்கட்சியை சேர்ந்த சுமார் 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதுடன் அதில் முதல் கையெழுத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இட்டுள்ளார்.
இதனிடையே சுயாதீனமாக செயற்பட போவதாக அண்மையில் நாடாளுமன்றத்தில் அறிவித்த ஆளும் கட்சியை சேர்நத சிலர் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையெழுத்திட மறுத்துள்ளதாக தெரியவருகிறது.
கையெழுத்துக்களை பெற்று முழுமைப்படுத்த வேண்டியுள்ளதால், நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் அரசியல் குற்றச்சாட்டு பிரேரணை ஆகியவற்றை சபாநாயகரிடம் கையளிக்கும் நடவடிக்கை சிறிது காலம் தாமதமாகும் என கூறப்படுகிறது.

