இலங்கை பெரும் சமூககொந்தளிப்பு ஆபத்தை எதிர்கொள்கின்றது என இலங்கை ஜனாதிபதியின் கடன் ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ள பேராசிரியர் சந்தா தேவராஜன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சமூக அமைதியின்மை தொடர்வதால் நாடு ஆபத்தான நிலையை எதிர்கொள்கின்றது என அவர் சிஎன்பிசிக்கு தெரிவித்துள்ளார்.
உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறைகளும் முன்னொருபோதும் இல்லாத பணவீக்கமும் தொடர்ச்சியான மின்வெட்டுகளும் ஆயிரக்கணக்கான இலங்கையர்களை வீதியில் இறங்கச்செய்துள்ளன,1948 இல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் ஒருபோதும் இல்லாத வீழ்ச்சியை நாடு எதிர்கொள்கின்றது.
சமூக கொந்தளிப்பே மிகப்பெரும் ஆபத்து இதன்காரணமாகவே நான் பணப்பரிமாற்றம்( cash tranfer) குறித்து வலியுறுத்தி வருகின்றேன் – மக்கள் கடும் சீற்றத்துடன் உள்ளனர் உங்களால் வீதிகளில் அதனை காணமுடியும் என இலங்கையின் கடன் நெருக்கடியை தீர்ப்பதற்காக ஆலோசனைகளை வழங்குவதற்காக ஜனாதிபதி நியமித்துள்ள குழுவில் இடம்பெற்ற சந்தா தேவராஜன் தெரிவித்துள்ளார்.
வறிய மக்களிற்கு உதவக்கூடிய பணப்பரிமாற்றம்,எரிபொருள் மின்சார மானியங்களை குறைத்தல் ஆகியன நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியை தீர்ப்பதற்கு மிக முக்கியமான திட்டங்களாக காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்நியசெலாவணி நெருக்கடி இலங்கை அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதில் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையை ஏற்படுத்தியுள்ளது,கொரோனா வைரஸ் பெருந்தொற்று நாட்டின் சுற்றுலாத்துறை வருமானத்தை பாதித்துள்ள நிலையிலேயே இந்த சூழ்நிலை உருவாகியுள்ளது.
மார்ச் மாதத்தில் அந்நியசெலாவணி 16 வீதத்தினால் (1.9 பில்லியன்) வீழ்ச்சியடைந்தது என ரொய்ட்டர் மத்திய வங்கியின் புள்ளிவிபரங்களை மேற்கோள்காட்டி செய்திவெளியிட்டுள்ளது.
எந்தவொரு சிக்கன நடவடிக்கைகளையும் முன்னெடுப்பது என்றால் அது குறித்து பொதுமக்களிற்கு அறிவூட்டுவது அவசியம் என சந்தா தேவராஜன் தெரிவித்துள்ளார்.
இது மிகவும் ஆபத்தான நிலைமை தற்போதைய சூழ்நிலையில் நீங்கள் சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது என்றால் அதனை மிகவும் அவதானமாக கையாளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு விடயங்களை நீங்கள் செய்யவேண்டும் ஒன்று வறியவர்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும்,( சனத்தொகையில் 40 வீதம்) அதற்காக பணப்பரிமாற்ற நடவடிக்கையை( cash tramsfer) முன்னெடுக்கவேண்டும்,என தெரிவித்துள்ள அவர் இரண்டாவது பொதுமக்களிற்கு தகவல் வழங்கும் நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும்,அதன் மூலம் பாரிய நெருக்கடியை எதிர்கொள்வதை தவிர்ப்பதற்கு இவ்வாறான நடவடிக்கைகள் அவசியம் என்பதை அறிவுறுத்தவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
.
இலங்கை பில்லியன் டொலர்களை கடனாக திருப்பிச்செலுத்த முடியாத நிலையேற்படும் என சர்வதேச அமைப்புகள் எச்சரித்துள்ளன.
இலங்கையின் நிலை குறித்த சர்வதேச கடன் மதீப்பீடுகள் குறைவடைவதால் இலங்கை கடன்களை பெறுவதற்கு சிரமப்படுகின்றது.
ரொய்ட்டர் வெளியிட்டுள்ள மத்திய வங்கியின் தரவுகளின்படி இலங்கையிடம் தற்போது 2பில்லியன் டொலர் கையிருப்பில் உள்ளது அதேவேளை இந்த வருடம் ஏழு பில்லியன் டொலரை அந்த நாடு கடனாக திருப்பி செலுத்தவேண்டிய நிலை காணப்படுகின்றது.
“We need to make sure that Sri Lanka does not have a disorderly default,” எனவும் தேவராஜன் தெரிவித்துள்ளார்.
இலங்கை வரிகளை அதிகரிக்கவேண்டும்,செலவீனங்களை குறைக்கவேண்டும்,நட்;டத்தில் இயங்கும் அரசநிறுவனங்களை மறுசீரமைப்பு செய்யவேண்டும், உணவு எரிபொருள் மின்சார மானியங்களை குறைக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையுடன் வறிய மக்களிற்கு பணஉதவியை வழங்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது மிகவும் முக்கியம் ஏனென்றால் அனேகமானியங்களை எரிபொருள் மின்சார மானியங்கள் போன்றவற்றை செல்வந்தர்களே அதிகளவு அனுபவிக்கின்றனர் எரிபொருள் விலை அதிகரிப்பு வறிய மக்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் அதனை ஈடுசெய்யும் விதத்தில் அரசாங்கம் எப்படியாவது பண உதவி தி;ட்டத்தை முன்னெடுக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

