உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்குள்ளான நீர்கொழும்பு – கட்டுவாப்பிட்டிய கத்தோலிக்க தேவாலயத்திலிருந்து கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் வரை இன்றைய தினம் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் கொழும்பின் பல தேவாலயங்களுக்கு முன்பாக கிறிஸ்வ மக்களால் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி தற்போது கொழும்பு – கிராண்ட்பாஸ் புனித சூசையப்பர் தேவாலயத்தில் அரசாங்கத்திற்கு எதிராக அமைதியான முறையிலான ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேவாலயங்களுக்கு வெளியே பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுவதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

