எதிர்வரும் சில மாதங்களில் ஏற்படபோகும் பொருளாதார பிரச்சினைகளிலிருந்து எம்மை நாம் பாதுகாத்துக்கொள்வதற்கான வழிவகைகளாக சுய உற்பத்தியில் எமது மக்கள் ஈடுபட வேண்டும் என பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்தார்.
பளை சரஸ்வதி முன்பள்ளியின் வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இங்கு பிரதம விருந்தினாராக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் அவர் கூறுகையில், நாட்டில் தற்பொழுது பேய்களின் ஆட்சி இடம்பெறுகின்றது.
இதனால் எதிர்வரும் மாதங்களில் பாரிய பொருளாதார பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது. எனவே ஒவ்வொருவரும் வீடுகளில் சுய உற்பத்திகளில் ஈடுபடுங்கள் என்றார்.

