உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 44 நாட்களாகி விட்டன. தலைநகர் கீவ் உள்ளிட்ட நகரங்களைக் கைப்பற்றும் ரஷிய படைகளின் முயற்சி உக்ரைன் படைகளின் பலத்த எதிர்ப்பால் தவிடுபொடியாகி போனது.
9.4.2022
06.40: தங்கள் சொந்த நாட்டு இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக உக்ரைன் 8 ஆண்டுகளாக போராடி வருகிறது. எனவே, இந்தப் போரில் உக்ரைன் வெற்றிபெற வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம்.
இந்தப் போரில் புதினும், ரஷியாவும் தோல்வியடைவதை பார்க்க நாங்கள் விரும்புகிறோம். உக்ரைன் மக்களின் உயிர்கள் அழிக்கப்பட்டுள்ளது. இந்தப் போர் விரைவில் முடிவுக்கு வரவேண்டும் என விரும்புவதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் செய்தித்தொடர்பு செயலாளர் ஜான் கெர்பி தெரிவித்துள்ளார்.

