அவசரகால நிலைமை பிரகடனம், ஊரடங்கு சட்டம் சமூக வலைத்தள இடையூறு சட்டவிரோதமானவை – சுமந்திரன்

304 0

ஜனாதிபதி அவசரகால ;சட்டத்தை பிரகடனம் செய்ததும் அதனை  பாராளுமன்றின் அனுமதிக்காக முன் வைக்க வேண்டும். எனினும் இங்கு அச்சட்டம் பாராளுமன்ற அனுமதிக்காக முன் வைக்கப்படாது  ஏப்ரல் 5 ஆம் திகதி மீளப் பெறப்பட்டுள்ளது.

அதனால் ஜனாதிபதி அவசரகால  சட்டத்தை பிரகடனம் செய்தமை, ; ஊரடங்கு சட்டம் பிறப்பித்தமை, ; பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய, தொலைதொடர்புகள் ஒழுங்குபடுத்தல்கள் ஆணைக் குழு ஊடாக சமூக வலைத் தளங்களின் செயற்பாட்டுக்கு ஏற்படுத்தப்பட்ட இடையூறுகள் என்பன  சட்டத்துக்கு முரணனாவை. என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இன்று (7) உயர் நீதிமன்றில் வாதிட்டார்.

ஜனாதிபதி அவசரகால  சட்டத்தை பிரகடனம் செய்தமை, ; ஊரடங்கு சட்டம் பிறப்பித்தமை,  தொலைதொடர்புகள் ஒழுங்குபடுத்தல்கள் ஆணைக் குழு ஊடாக சமூக வலைத் தளங்களின் செயற்பாட்டுக்கு ஏற்படுத்தப்பட்ட இடையூறுகள் என்பனவற்றை ஆட்சேபித்து உயர் நீதிமன்றில்  தாக்கல் செய்யப்ப்ட்டுள்ள 4 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பிலான ; பரிசீலனையின் போதே ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இவ்வாதங்களை முன் வைத்தார்.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான முர்து பெர்னாண்டோ தலைமையிலான அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர்  அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த அடிப்படை உரிமை மனுக்கள்  இன்று (7)பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற  ஜெனரல் கமல் குணரத்ன, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு, பொலிஸ் மா அதிபர், சட்ட மா அதிபர் உள்ளிட்டோர் இம் மனுக்களின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி அவசரகால ; சட்டத்தை பிரகடனம் செய்தமை, ஊரடங்கு சட்டம் பிறப்பித்தமை,  தொலைதொடர்புகள் ஒழுங்குபடுத்தல்கள் ஆணைக் குழு ஊடாக சமூக வலைத் தளங்களின் செயற்பாட்டுக்கு ஏற்படுத்தப்பட்ட இடையூறுகள்  ஆகிய   ;செயற்பாடுகளினூடாக அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கியதுடன் பிரதிவாதிகளுக்கு மன்றில் ஆஜராகி விளக்கமளிக்க அறிவித்தலும் அனுப்பியது.

அதற்கமைய, இந்த அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் ஜுலை மாதம் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந் நிலையில் இம்மனுக்கள் தொடர்பில் ஏதும் ஆட்சேபனைகள் இருப்பின் அவற்றை  மே மாதம் 20 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் முன் வைக்க பிரதிவாதிகளுக்கு உத்தர்விட்ட உயர் நீதிமன்றம், அதற்கான பதில்களை  ஜூன் மாதம் 3 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் முன் வைக்க மனுதாரர்களை அறிவுறுத்தியது.

இந்த மனுக்கள் இன்று பரிசீலிக்கப்பட்ட போது ; மனுதாரர்களில் ஒருவரான  ஊடகவியலாளர் ஆர்.சி.கியூவ். ரேமன்ட்  சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.

;ஜனாதிபதி, கடந்த முதலாம் திகதி  பொது மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முழு நாட்டிலும் அவசரகால ; நிலையை பிரகடனம்  செய்ததாக இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டினார். இதன்போது தொடர்ந்தும் வாதங்களை முன் வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன்,

அவசரகால  நிலைமை பிரகடனம் செய்யப்பட்டதன் பின்னர்  ஏப்ரல் 2 ஆம் திகதி  நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் ; பிறப்பிக்கப்பட்டது. ஏப்ரல் 3 ஆம் திகதி ; பாதுகப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய, ; தொலை தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக் குழு  சமூக வலைத் தளங்களின் செயற்பாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தியது.

இவ்வாறான உத்தரவொன்றினை தொலைதொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக் குழுவுக்கு பிறப்பிக்க, அதிகாரம் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கே உள்ளது. எனினும் சமூக வலைத் தளங்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு செயலர்  ;தொலைதொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக் குழுவுக்கு விடுத்த உத்தரவு முற்றாக சட்ட விரோதமானதாகும்.

இந்த சமூக வலைத் தள  முடக்கம் அல்லது  இடையூறுகள் தொடர்பில் மீள் பரிசீலனை செய்யுமாறு, ; அப்போதைய அமைச்சர் நாமல் ராஜபக்ஷ  ஊடாகவே சமூக வலைத் தளத்தில் குறிப்பொன்று இடப்பட்டிருந்தது.

ஜனாதிபதி அவரது பதவியிலிருந்து விலக வேண்டும் என நாடளாவிய ரீதியில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் உச்ச நிலையை அடைந்துள்ள சந்தர்ப்பத்தில்  அவற்றை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி, இந்த அவசர கால நிலைமையை பிரகடனம் செய்துள்ளார். அது மக்களின் நலனுக்காக செய்யப்பட்டது அல்ல.

;ஜனாதிபதி அவசரகால   ;சட்டத்தை பிரகடனம் செய்ததும் அதனை  பாராளுமன்றின் அனுமதிக்காக முன் வைக்க வேண்டும். எனினும் இங்கு அச்சட்டம் பாராளுமன்ற அனுமதிக்காக முன் வைக்கப்படாது ; ஏப்ரல் 5 ஆம் திகதி மீளப் பெறப்பட்டுள்ளது.

அதனால் ஜனாதிபதி அவசரகால ; சட்டத்தை பிரகடனம் செய்தமை ; ஊரடங்கு சட்டம் பிறப்பித்தமை, பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய, ;தொலைதொடர்புகள் ஒழுங்குபடுத்தல்கள் ஆணைக் குழு ஊடாக சமூக வலைத் தளங்களின் செயற்பாட்டுக்கு ஏற்படுத்தப்பட்ட இடையூறுகள் என்பன  சட்டத்துக்கு முரணனாவை. ; அதனால் அந் நடவடிக்கைகள் ஊடாக அரசியலமைப்பு ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உத்தரவு பிறப்புக்குமாறு கோருகின்றேன். ‘ என  வாதிட்டார்.

அவசரகால சட்டத்தை சவாலுக்கு உட்படுத்தி மேலும் மூன்று மனுக்களும் உயர் நீதிமன்றில்  தாக்கல் செய்யப்பட்டிருந்தன. ; ஊடகவியலாளர் ரசிக ஜயகொடி, ; மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களான ; சஷி வின்ஸ்டர் மற்றும் ; லிஹினி பெர்ணான்டோ அகியோரால் இம்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்கள் சார்பிலும் சட்டத்தரணிகள் மன்றில் வாதங்களை  முன்வைத்தனர்.

இந் நிலையில், இந்த மனுக்கள் மீதான பரிசீலனைகளின் போது சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ரஜீவ் ; குணதிலக மன்றில் ஆஜராகியிருந்தார். ; ஜனாதிபதி ஊடாக பிரகடனம் செய்யப்படும்  அவசர கால சட்டம் தொடர்பில்  நீதிமன்றில் சவலுக்கு உட்படுத்த முடியாது என இதன்போது பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ரஜீவ் குணதிலக குறிப்பிட்டார்.

இந்த அவசரகால நிலைமை தொடர்பில் ஜனாதிபதி பாராளுமன்றுக்கு மட்டுமே பொறுப்புக் கூற கடமைப்பட்டுள்ளதாகவும், அவசர கால சட்டத்தின் சட்ட பூர்வ தன்மை தொடர்பில் பாராளுமன்றத்துக்கு மட்டுமே ஆராய முடியும் எனவும் அவர்  வாதிட்டார்.

பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மக்களின் வாழ்வியல் நடவடிக்கைகள் மற்றும்  சட்டத்தின் மீதான ஆட்சிக்கு  அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதிக்கு தோன்றும் போது வசரகால சட்டத்தை பிரகடனம் செய்ய முடியும் என இதன்போது பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ரஜீவ் குணதிலக குறிப்பிட்டார்.

சமூக வலைத் தளங்களின் செயற்பாட்டுக்கு இடையூறு விளைவித்தமை குறித்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ரஜீவ் குணதிலக, ; தொலை தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக் குழுவுக்கு பொறுப்பான அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதிக்கு அவ்வாணைக்குழுவுக்கு அது சார்ந்த உத்தரவுகளை பிறப்பிக்க முடியும் என வாதிட்டார்.

அதனால் ஜனாதிபதியின் பிரகடனம் ஊடாக அடிப்படை உரிமைகள் மீறப்படவில்லை என அவர் வாதிட்டார்.;இந் நிலையிலேயே இரு தரப்பு விடயங்களையும் ஆராய்ந்த உயர் நீதிமன்றம்  மனுக்களை விசாரணைக்கு ஏற்று பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்பியது