ரணிலை தனியாக சந்தித்தார் கோட்டாபய ராஜபக்ச!

176 0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (7) இடம்பெற்றது.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் மாத்திரமே கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அழைப்பின் பிரகாரம் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்பின் போது, ​​சர்வதேச நாணய நிதியத்திற்கான விஜயம் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் ஜனாதிபதி விரிவாக கேட்டறிந்தார்.

மேலும், ஜப்பான், தென்கொரியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பிராந்தியத்தில் ஐந்து முக்கிய நாடுகளால் அமைக்கப்படவுள்ள உத்தேச குழுக்கள் குறித்தும் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோத்தபாய ராஜபக்ச நீண்ட நேரம் கேட்டறிந்தார்.

ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலின் பின்னர் ஜனாதிபதி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.