ராணுவத் துறையில் பிரமாண்டமான மறுகட்டமைப்பு: டிரம்ப் அதிரடி திட்டம்

263 0

புதிய போர் விமானங்கள், போர் கப்பல்கள் மற்றும் அதிநவீன தளவாடங்களுடன் அமெரிக்க ராணுவத்தை பிரமாண்டமான முறையில் மறுகட்டமைப்பு செய்ய டொனால்ட் டிரம்ப் அதிரடியாக தீர்மானித்துள்ளார்.

புதிய போர் விமானங்கள், போர் கப்பல்கள் மற்றும் அதிநவீன தளவாடங்களுடன் அமெரிக்க ராணுவத்தை பிரமாண்டமான முறையில் மறுகட்டமைப்பு செய்ய டொனால்ட் டிரம்ப் அதிரடியாக தீர்மானித்துள்ளார்.

அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்ட்டகான் வளாகத்தில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான புதிய அரசு நிர்வாகத்தில் அமெரிக்க ராணுவ மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ள ஜேம்ஸ் மாட்டிஸ் நேற்று பதவி ஏற்று கொண்டார்.

இவ்விழாவில் பங்கேற்ற அதிபர் டொனால்ட் டிரம்ப், ‘புதிய ராணுவ மந்திரிக்கு புகழாரம் சூட்டி பாராட்டி பேசினார். நாட்டுக்கு சேவையாற்றுவதற்கு தனது வாழ்நாளை அர்ப்பணித்த ஜேம்ஸ் மாட்டிஸ், கண்ணியத்துக்கும் பக்திக்கும் சொந்தக்காரர்.

அதிரடிக்காரரான அவருக்கு அதிரடி (ஆக்‌ஷன்) மிகவும் பிடிக்கும். யாராலும் கேள்வி கேட்க (எதிர்கொள்ள) முடியாதபடியும், அமைதி விவகாரத்தில் சமரசம் செய்துகொள்ளாத வகையிலும் நமது ராணுவ பலம் இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.