நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பதவி விலகி வீடு செல்லக்கோரி தனி நபர் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றார்.
மன்னார் நகர் பகுதியில் இன்று (6) இக் கவனயீர்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரதான சுற்று வட்ட பகுதியில் #go home gota என வாசகம் எழுதப்பட்ட பதாகையை ஏந்தியவாறு குறித்த நபர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்.
முகமூடி அணிந்து குறித்த பதாகையை ஏந்தியவாறு அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.


