எதிர்ப்பாளர்களை அமைதியான முறையில் நடத்து கொள்ளுமாறும், மாற்றத்திற்காக அவர்களின் குரல்களையும் ஒற்றுமையையும் பயன்படுத்துமாறும் அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர், ஜூலி சுங் இந்த கருத்துக்களை விடுத்துள்ளார்.
இலங்கை அதன் வரலாற்றில் ஒரு முக்கியமான கட்டத்தில் நிற்கும் போது ஒவ்வொரு குரலும் முக்கியமானது என்று அவர் கூறியுள்ளார்.
இந்தநிலையில் தீர்வுகளை விரைவாகக் கண்டறிந்து அமுல்படுத்தவேண்டும் என்று அமெரிக்க தூதுவர் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

