ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டு, நாட்டை நிர்வகிப்பதற்காக நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரான குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஒரு நபராக இருக்கலாம், விடயங்களை மேற்பார்வையிட செனட் போன்ற சபை அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இளைஞர்களின் தலைமைத்துவத்தை முன்னெடுக்க, அவர்களுக்கு முக்கிய இடம் வழங்கப்பட வேண்டுமென அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

