கோட்டாபய ராஜபக்ச விடுத்த அழைப்பை மக்கள் விடுதலை முன்னணி நிராகரித்துள்ளது

260 0

அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த அழைப்பை மக்கள் விடுதலை முன்னணி நிராகரித்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அந்த கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று காலை அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.