20ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் பல்வேறு தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு 20ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
20ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வது குறித்த முனைப்புக்கள் பல்வேறு வழிகளில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தற்போது இலங்கை அரசியல் சூடுபிடித்துள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்சவை தவிர்ந்த, அமைச்சரவையிலுள்ள அனைத்து அமைச்சர்களும் பதவி விலக தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவித்திருந்தார்.
மேலும், நேற்றைய தினம் பிரதமர் மகிந்த பதவி விலகுவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போதைய நெருக்கடிக்கு பிரதான காரணகர்த்தா என பலராலும் குற்றம்சாட்டப்படும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தொடர்ந்தும் மௌனம் காத்து வருகிறார்.

