மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

212 0

நுகேகொடையிலிருந்து நாவின்ன வரையிலான பழைய கொட்டாவ வீதியில் இன்று (03) மாலை மின்கம்பத்தில் இருந்து ஒருவர் தவறி விழுந்துள்ளார்.

எதிரிசிங்க வீதி சந்தியில் மின்மாற்றியுடன் கூடிய உயர் அழுத்த மின்கம்பியில் ஏறிய நபர் தவறி விழுந்ததை அடுத்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அதே வீதியில் வசிக்கும் 53 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மின்கம்பத்தில் ஏறும் போது அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.