யாழில் ஜேவிபி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு! குவிக்கப்பட்ட பொலிஸார்

334 0

யாழ்ப்பாணத்தில் மக்கள் விடுதலை முன்னணியினர் ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், அலுவலகத்தில் முன்னால் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரம் இன்றைய தினம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது பல ஊடகவிலாளர்கள் மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்திற்கு சென்றிருந்தனர்.

இந்த நிலையில் திடீரென அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் அலுவலகத்திற்கு முன்பாக திரண்டதுடன், அலுவலகத்திலிருந்து எவரும் வெளியேறாதவாறு அங்கு நிற்பதாக கூறப்படுகிறது.