துப்பாக்கிகளுடன் இருவர் கைது

241 0

நாட்டின் இருவேறு பகுதிகளில் அனுமதிப்பத்திரமின்றி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளை தம்வசம் வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வவுனியா, புளியங்குளம் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட சம்மளன்குளம் பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் இரண்டுடன் சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த 76 வயதான நபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர் நேற்றைய தினம் வவுனியா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இதேவேளை அம்பாறை, மங்களகம பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 52 வயதான தெஹியத்தகண்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

அம்பாறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.