தனிநபரிடம் அதிகாரம் அனைத்தையும் குவிக்கின்ற அமைப்பு முறையை மாற்றவேண்டும்- கர்தினால் மல்கம் ரஞ்சித்

279 0

இலங்கையின் அரசியல் அமைப்பில் மாற்றங்களை மேற்கொள்வதே நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிற்கு தீர்வு தனிமனிதர்களை மாற்றுவதால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

உயர்ந்த பதவிகளில் உள்ளவர்களை அகற்றுவது தீர்வாக அமையாது ஏற்கனவே அது பயனுள்ள விடயமல்ல என்பது நிரூபணமாகிவிட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனிநபரிடம் அதிகாரம் அனைத்தையும் குவிக்கின்ற அமைப்பு முறையை மாற்றவேண்டும் என தெரிவித்துள்ள அவர் உயர் பதவியில் உள்ளவர்களிற்கு சட்டத்தின் பிடியிலிருந்து விலக்களிப்பதை மாற்றவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அரசநிறுவனங்களில் உயர் பதவிகளை வகிக்கும் நெருங்கிய உறவினர்களையும் சகாக்களையும் பதவி நீக்கம் செய்யவேண்டும் என தெரிவித்துள்ள கர்தினால் நிபுணர்களின் ஆலோசனைக்கு ஏற்ப அரசநிறுவனங்களில் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.