டொலர் தட்டுப்பாட்டுக்கு மத்தியில் நிதி அமைச்சர் வழங்கியுள்ள முக்கிய பணிப்புரை

272 0

நாட்டில் தற்போது நிலவும் டொலர் தட்டுப்பாட்டுக்கு மத்தியிலும் மருந்துப் பொருட்கள் இறக்குமதிக்கு முக்கியத்துவம் வழங்குமாறு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தனியார் மருந்தக உரிமையாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக பல்வேறு தரப்பிலிருந்தும் முறைப்பாடுகளும், கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தினருக்கும், நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் பேச்சுவார்த்தையொன்று நேற்று நடைபெற்றது.