கொழும்பில் வெடித்த வன்முறை – கடும் கோபத்தில் கோட்டாபய

204 0

மிரிஹானயிலுள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு செல்லும் வீதியில் மக்கள் முன்னெடுத்த பாரிய ஆர்ப்பாட்டத்தினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடும் கோபமடைந்துள்ளார்.

நள்ளிரவில் ஜனாதிபதி செயலகத்தில் தனது பாதுகாப்பு சபை கூட்டிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, புலனாய்வு பிரிவினரை கடுமையாக திட்டியதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பல்கலைக்கழக ஆர்ப்பாட்டம் உட்பட இரண்டு நாட்களுக்கு முன்னரே புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் தனது பாதுகாப்பு பிரிவிற்கு தெரியப்படுத்தப்படும். எனினும் இன்று (நேற்று) எனது வீடு சுற்றிவளைக்கப்படும் வரையிலும் தகவல் வழங்கப்படவில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சனிக்கிழமை விசேட பாதுகாப்பு நிலைமை தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் உட்பட எவ்வித புலனாய்வு பிரிவினரும் தனக்கு இந்த விடயத்தை தெரியப்படுத்தவில்லை என ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் இராணுவ தளபதி, பொலிஸ் மா அதிபர், கடற்படைத் தளபதி, புலனாய்வு பிரிவு பிரதானி சுரேஷ் சலே, மேல் மாகாண பொலிஸ் பிரதானி உட்பட குழுவினர் கலந்துகொண்டுள்ள நிலையில் கடற்படை தளபதி கலந்து கொள்ளவில்லை என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.