பாவூர்சத்திரத்தில் ஆட்டோவில் கடத்திய ரூ.1.80 லட்சம் மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்த போலீசார் 2 வாலிபர்களை கைது செய்தனர்தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பரவலாக விற்கப்பட்டு வருவதாக புகார்கள் வந்தது..
அதன் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில் பாவூர்சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது நெல்லை-தென்காசி ரோட்டில் வந்த பயணிகள் ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் மூட்டைகளில் தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது தெரியவந்தது.
அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சுமார் ரூ.1.80 லட்சம் ஆகும். இதையடுத்து போலீசார் ஆட்டோவில் வந்த பூபால சமுத்திரம் மேல தெருவை சேர்ந்த சரவணன் (வயது 32) மற்றும் தெற்கு பூலாங்குளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த அனிஷ் பொன்னுத்துரை (வயது30) ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் சில்லரை விற்பனைக்காக ஆட்டோவில் புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் குட்கா கொண்டுவந்த பயணிகள் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

