சிவகளையில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடக்கம்

339 0

சிவகளை பரம்பு பகுதியில் 3-ம் கட்ட அகழாய்வு பணியை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் இன்று தொடங்கி வைத்தார்.தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளையில் 2 கட்டங்களாக மாநில அரசு சார்பில் தொல்லியல் அகழாய்வு பணிகள் நடந்தது.இந்த அகழாய்வு பணியில் ஏராளமான தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

குறிப்பாக முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், பானைகள், பானை ஓடுகள், வெளிநாட்டு பானை ஓடுகள் என ஏராளமான பொருட்கள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் இருந்து நெல்மணிகள் கண்டெடுக்கப்பட்டது.

அந்த நெல்மணியின் வயது 3,200 ஆண்டுகள் பழமையானது என கடந்த வருடம் சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது அனைவரையும் சிவகளை பக்கம் திரும்பி பார்க்க வைத்தது.

இந்த நிலையில் தொடர்ந்து 3-வது முறையாக சிவகளையில் அகழாய்வு பணிகள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் 3-ம் கட்ட அகழாய்வு பணியை சிவகளை பரம்பு பகுதியில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

நெல்லையில் அமையுள்ள பொருநை அருங்காட்சியத்திற்கு இணையாக சிவகளையில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அகழாய்வு இயக்குனர் பிரபாகரன் கூறுகையில், இந்த அகழாய்வு பணி செப்டம்பர் மாதம் இறுதி வரை நடைபெற உள்ளது. இதற்காக தமிழக அரசு சார்பில் ரூ. 29 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.