ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், அனுராதபுரம் ஜெயபோதியில் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ள புத்தரிசி பெருவிழாவில் இடம்பெறும் அன்னதானத்துக்கென மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 650 கிலோகிராம் அரிசி லொறி மூலம் அனுப்பி வைக்கபட்டதாக, மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்கள நிர்வாக அதிகாரி ஏ.எம்.ஜௌபர் தெரிவித்தார்.
அரிசி கையளிக்கும் விழா, கமநல சேவைகள் அபிவிருத்தி நிலையத்தில் இன்று (30) நடைபெற்றது.
கமநல சேவைகள் அபிவிருத்தி திணைக்கள நிர்வாக அதிகாரி எம்.எம்.ஜௌபர் இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
மட்டக்களப்பு மாவட்ட விவாயிகளால் பெரும்போகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லிலிருந்து பெறப்பட்ட அரிசியை அன்னதானத்துக்காக விவசாயிகள் வழங்கினர்.
இவ்வாறு கையளிக்கப்பட்ட அரிசி, அநுராதபுரத்துக்கு இன்று காலை அனுப்பிவைக்கப்பட்டது.

