உக்ரைன் மீது ரஷியா 33-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. போர் விமானங்கள், டாங்கிகள் போன்ற கூடுதல் உபகரணங்கள் இன்றி மரியுபோல் நகரைக் காப்பாற்ற முடியாது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
12.50: ரஷியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதை நேட்டோ அமைப்போ அல்லது அமெரிக்க அதிபரோ நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என ஜெர்மன் பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் தெரிவித்துள்ளார். ரஷியாவில் ஆட்சி மாற்றம் செய்வது எங்கள் கொள்கையல்ல என்றும், அவர் விளக்கம் அளித்துள்ளார்.
11.30: உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரில் அமெரிக்காவும் ஈடுபட வேண்டிய நெருக்கடி நிலை உருவாகும் என பெரும்பாலான அமெரிக்கர்கள் கருத்துகின்றனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், இந்த போரில் அமெரிக்கா பங்கேற்றால், ரஷியா அமெரிக்கா மீது அணு ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தலாம் என பாதிக்கும் மேற்பட்ட அமெரிக்க மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
11.00: ரஷியாவை தனது நாட்டின் எல்லையிலிருந்து முழுமையாக வெளியேற்றுவது சாத்தியமற்றது என்பதை புரிந்து கொண்டதாகக் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது மூன்றாம் உலக போருக்கு வழி வகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
06.40: நாட்டு மக்களிடம் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, துருக்கியில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் உக்ரைனின் முன்னுரிமைகள் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகும். உண்மையில் தாமதமின்றி நாங்கள் அமைதியை எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தார்.
04.30: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடனான நேர்காணலை ஒளிபரப்புவதை, வெளியிடுவதை தவிர்க்குமாறு ரஷியாவின் தகவல் தொடர்பு கண்காணிப்பு அமைப்பு ரஷிய ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
02.40: போருக்கு எதிரான கருத்துகளை தெரிவித்ததாக கூறி, ஜெர்மனியில் இருந்து வெளியாகும் பில்டு நாளிதழின் வெப்சைட்டுக்கு ரஷிய அரசு தடை விதித்துள்ளது.
00.20: போர் நிறுத்தம் தொடர்பாக துருக்கியில் உக்ரைன், ரஷியா இடையிலான 2-வது கட்ட அமைதி பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது என உக்ரைன் மந்திரி டேவிட் அரகாமியா சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
கொரியா போல் உக்ரைனையும் இரண்டு துண்டுகளாகப் பிரிக்க ரஷியா திட்டமிட்டுள்ளது என உக்ரைன் உளவுத்துறை எச்சரிக்கை
விடுத்துள்ளது.

