அரியவகை பூச்சியினங்களைப் பிடித்தவர்களுக்கு விளக்கமறியல்!

254 0
சிங்கராஜ வனப்பகுதியில் அரிய வகை ஓணான்கள் உள்ளிட்ட சிறிய பூச்சியினங்களை சேகரித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மொரவக்க நீதவான் நீதிமன்ற நீதவான் அஜித் லியனகே உத்தரவிட்டுள்ளார்.

வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு, நேற்று (27) சந்தேகநபர்கள் இருவரும் மொரவக்க நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது இந்த மாதம் 17ஆம் திகதி ஜேர்மனியிலிருந்து சுற்றுலாப் பயணிகளாக வருகைத் தந்த 52 மற்றும் 47 வயதுடைய இருவரும் சிங்கராஜ வனப்பகுதியில் அரிய வகை பூச்சியினங்களை சேகரித்த நிலையில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.